ரொம்ப நாளா மனசுல ஒரு எண்ணம் ...நம்ப ஏன் பதிவு எழுத கூடாதுன்னு... அதான் இப்ப எழுதஆரம்பிச்சிட்டேன்... நான் பின் தொடர்ந்த பதிவர்களை போல நானும் சொந்த கதை சோக கதைகளையே எழுதலாம்னு முடிவுக்கு வந்திருக்கேன்...
பெயர் : விக்னேஷ் ஜானகிராம் கருணாகரன்
பெயர் : விக்னேஷ் ஜானகிராம் கருணாகரன்
படிப்பு : இளநிலை மின்னியல் பொறியாளர்
வேலை செய்வது : ஒரு Fortune 500 நிறுவனம்
உத்தியோகம் : சூழ்நிலை கைதி
ஊர் : சிங்கார (சிங்கி அடிக்க வைக்கும்) சென்னை
ஊர் : சிங்கார (சிங்கி அடிக்க வைக்கும்) சென்னை
சிங் சாங் அடிக்கலைனா இங்க முன்னேறுவது ரொம்ப கஷ்டம்
பெயர் காரணம்
என்னடா இவன் பெயருக்கெல்லாம் காரணம் சொல்றான்னு பாக்கிறீங்கள... என்னோட நண்பர்கள் பலர் என்கிட்டே கேக்குற கேள்வி இதுதான்..
எண்டா உன் பெயர் இவ்ளோ பெருசா இருக்கு?
உங்கப்பா பெயர் ஜானகிராம்-ஆ ?
அதனால என்ன இனிமே யாரும் இந்த கேள்வி கேக்க கூடாதுன்னும்... முதல் சொந்த கதைலையே.. பியர் காரணத்த போட்டுலாம்னு எழுதுறேன்...
ஆம்பிளை பிள்ளை பொறந்தா விநாயகர் பெயரிடனும்றது அப்பாவோட வேண்டுதல்..சிறிய தகப்பனாரின் பெயரான "ஜானகிராம்" னு (நட்சத்திர எழுத்தும் "ஜா" வந்துட்டதுனால்) வெக்கனும்றது தாய்மாமாவின் விருப்பம்..
ரெண்டு பேரோட திருப்திக்காகவும் இவ்வளவு பெருசா வெச்சிடாங்க...
ஆனா பேரு வேச்சவன்களே என்ன முழு பேரு சொல்லி கூப்பிட்டதில்ல.. அப்பா மட்டும் விக்னேஷ்-னு அன்பா கூப்பிடுவார்.. மத்த எல்லாரும் "விக்கி"-னு தான் கூப்பிடுவாங்க...
ஆனா எனக்கு என்னவோ "ஜானகி", "ஜானகிராம்" னு கூப்பிட்டா ரொம்ப பிடிக்கும் .
அடுத்த தம்பட்டம் வரும் வாரங்களில்
Terror all the best for your effort... expecting more..... I am there beside you Mr. Go ahead...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete@Thangavel @Jebin thanks for your support & appreciation macha...and rofl on the My new nick names.... But b4 get a copy right from karhi for "Kikiri"
ReplyDelete