Wednesday, June 6, 2012

என்னை ஈர்த்த பாடல் வரிகள் பகுதி -1


பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பி கேட்டதாம் கருடா சௌக்கியமா.. யாரும் இருக்கும் இடத்தில்; இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது”

இந்த பாட்டை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவ்வளவு அருமையான தத்துவத்தை பாமரனும் உணரும் படி கவியரசு எழுதியது...
கேட்கும் போதெல்லாம் உன் துகுதிக்கு ஏற்றார் போல் நடந்து கொள் என நினைவூட்டும் பாடல்..

ஒருநாளும் வாழ்க்கை எங்கும் ஓடி போகாது.. மறு நாளும் வந்து விட்டால்.. துன்பம் தேயும் தொடராது.-புதுப்பேட்டை..

இந்த பாட்டை கேக்கும் போதெல்லாம்.. எனக்கு நினைவுக்கு வர்றது “என் பேரு  குமாரு கொக்கி குமாரு“.. எனக்கு புடித்த பாடல்களில் எப்பவுமே முதல் இடம் இதற்கு தான்... எதுவுமே நிரந்தரமில்ல.. இதுவும் கடந்து போகும் இந்த நிலையம் மாறிவிடும்,.. என்று உணர்த்தும் அருமையான பாடல்..படத்தில் இடம்பிராதது ஒரு மிகப்பெரிய வருத்தம்

“ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே நீ கண்ணுறங்கு.. என்னோட மடி சாய்ந்து” – ராம்

எவ்வளோ அம்மா பாடல்கள் வந்தாலும்.. எனக்கு பிடித்த அம்மா பாடல் இதுதான்...பல பாடல்களிலும் அம்மாவை பாராட்டே பாடியிருப்பார்கள்..ஆனால் பாராட்டினால் மட்டும் போதாது.. அவரை நீ தான் சீராட்டனும் என்று உணர்த்தும் பாடல்..

“நான் ஒரு முட்டாளுங்க ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க ..ஏற்கனவே சொன்னவக ஏமார்ந்து போனாங்க.. எல்லாம் தெரிஞ்சவங்க புத்தி சொல்ல வந்தீங்க.”

ஏனோ எனக்கு சிறு வயதிளிருந்தே சந்திரபாபு பாட்டுனா கொஞ்சம் இல்ல ரொம்பவே இஷ்டம்..
அடுத்தவன் உன்னை குறை சொல்லறான..அதை பத்தி எல்லாம் கவலை படாம,,அவன் சொன்னதை உன்னோட செயலால பொய் நிருபிக்க சொல்ற பாட்டு..

“என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பார் என்னை பிடிக்கும்”–வாரணம் ஆயிரம்

ஒரு பெண்ணோ ஆணோ ஒரு இணையை தேர்வு செய்யும் முன்.. தத்தம் அவரவர் இணையின் குடும்ப சூழ்நிலையையும்..பழக்க வழக்கங்களையும் தேர்ந்து கொள்ளுங்கள்...ஒரு தெரிவு வந்த பின் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்..
ஏனினில், பெரும்பாலானோர் காதலை கனிய வைப்பதற்காக நடிக்க தான் செய்கிறார்கள்... ஒரு பபிரச்சனை வரும் பொது தான் அவரவர் சுயனில்லை இணைக்கு தேரா வருகிறது

“காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயரோடிருந்தால் வருகிறேன்” –இயற்கை
என் உயிர் பிரியும் வரை உன் காதலுக்காக காத்திருபேன்  என்பதையும்.. உன்னை உயருக்கும் மேலாக காதலிப்பவனை...ஏற்று கொள்ள மறுக்கிராயே என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார்கள்

என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை.... கண்ணீருக்கே நான் தத்துப்பிள்ளை.. என் காதலீ,,,,,,,,தண்ணீரில் மூழ்காது கற்றுள்ள பந்து என்னோடு நீ பாடவா சிந்து...-ஜேசுதாஸ் பாடல்(ஈரமான ரோஜாவே)



மிக நேர்த்தியான வரிகளுடைய சோகப்பாடல். கேட்பவர்கள் அனைவரயும் சோகத்தில் ஆழ்த்தும் பாடல்...

தம்பட்டங்கள் தொடரும்!!!!!

No comments:

Post a Comment