எவ்வளவு வருஷம் தான் கஜினி முகமது 17 முறை படை எடுத்தார்னு படிக்கிறது
படிச்சிட்டு இருக்குறது. நம் நாட்டு கலாச்சாரம்,பண்பாடு இதெல்லாம் பத்தி சேர்க்கலாம்ல..யாருக்கும்
திருடன்னு சொன்னா கோவம் வர மாட்டேங்குது (நெஞ்சில் நன்கூரமாய் பதிந்தால் பிரபல
பதிவரிடமிருந்து சுட்ட வரிகள்)...வேற எதாவது மோசமான கெட்ட வார்த்தைல திட்டினா தான்
கோவம் வருது...(சில பேருக்கு அப்ப கூட கோவம் வர மாட்டேங்குது)..
லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும்
தவறு...அடுத்தவர் பொருளுக்கு ஆசை பட கூடாதுன்னு...இதெல்லாம் பள்ளிக்கூட்த்திலேய
கத்துகிட்டா தான வருங்காலத்திலாவது இந்தியாவில் நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்க
முடயும்.
இதெல்லாம் தமிழ் செய்யுள்லயே...ஔவ்வயார்,
திருவள்ளுவர், சீத்தலைச்சாதனார், தொல்காப்பியர், இளங்கோவடிகள் எல்லாரும்
எழுதிருக்காங்கலே அதெல்லாம் படிச்சா போதாதானு... நீங்க கேக்கலாம்..ஆனான, இந்தப்
பயலுக எல்லாம் வாய்ப்பாட்ட கூட மனப்பாடம் தான
பண்றானுவ...அது மட்டும் இல்லாம எழுத்துப்பிழை இல்லாம யாரவது எழுதினா ஆசிரியரே
கின்னஸ் சாதனை பண்ணா மாதிரி பேசுறாகங்க,,
சரி... ஆசிரியர்
நட்த்துறத வெச்சி புரிஞ்சிக்க முடியாதான்னு கேள்வி எழுப்பலாம்.. முன்னெல்லாம் ஆசிரியராகிறத..பாக்கியமா
நினைபாங்க.. இப்பெல்லாம் வேலை கிடைக்காதவங்க, சும்மா வீட்டுல இருக்கிறதுக்கு
ஏதாவது தனியார் பள்ளியில் வேலைக்கு போகலாம்னு இருக்கும் யுவதிகள் இவங்களெல்லாம்
தான ஆசிரியர் வேலைக்கே வராங்க..அப்பறம் எங்க அவங்க பாடத்தை ஒழுங்கா நட்த்தி பசங்க
புரிஞ்சுக்கிறது...
இவங்க
மத்தியிலும் சில நல்ல அற்புதமான ஆசிரியரெல்லாம் இருக்காங்க.. அவங்களால தான் வண்டி
கொஞ்சம் ஒடிட்டு இருக்கு..
சரி,
தனியார் பள்ளிகள்-ல குழந்தைகளை சேர்க்காம, அரசு பள்ளிகள்-ல் சேர்த்து விட
வேண்டியதுதானன்னு..அங்க எல்லாம் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்வாங்க.. ஆசிரியர்.. பதிவியை சேவையா நெனைக்குற ஆசிரியர் தான்
வேலைக்கு வருவாங்க.. ஏன்னா அவங்க ஆசிரியர் ஆகனும்னு சிறு வயதிலிருந்தெ பயிற்சியில்
ஈடு பட்டிருபாங்கனு சொல்லுவீங்க...
சென்னை-ல
பெரும்பாலான அரசு பள்ளிகள்-ல ஆசிரியர் பதவி (வேலையோ.. உத்தியோகமோ அல்ல) காலியிடமா தான் இருக்குது..
அடிப்படை வசதி மிகவும் குறைவா தான் இருக்குது....என்னுடைய சிறவயது நண்பர் ஒருவர்
படித்த அரசு பள்ளியில் மழை பெய்தா பள்ளி விடுமுறை தான்.. ஆசிரியர் வந்தாலும்
விடுமுறை மாதிரி தான் இருக்கும்..
தேர்வு
நாட்களுக்கு முன்னாடி வினாத்தாளை பசங்கலுக்கு வினயோகம் பண்ணி தேர்ச்சி அடைய
வெச்சிருவார்..
இதனால
சகல நண்பர்களுக்கு அடியேன் அடிக்கும் தம்பட்டம் என்னவென்றால்...குழந்தைகளுக்கு
அனா, ஆவன்னா சொல்லு கொடுக்குறதிக்கு முன்னாடி. நல்ல பழக்க வழக்கங்கல சொல்லி
கொடுங்க... பெரியோர்கள் பலரும் சொன்ன மாதிரி, நல்ல மதிப்பெண் எடுகிறார்களா அன்று
பார்பதி விட்டு விட்டு.. நல்ல குண நலன்களை பெற்றிகிரார்களா என்று பாருங்கள்......அவங்களுக்கு
நல்லது கட்டத்தை சரியா சீர்தூக்கி பார்க்கும்படி அவங்க பகுத்தறிவை வளர்த்துவிடுங்க..
வருங்கால
தலைமுறையினரால..நம்ம வீடு மட்டுமில்லாம நாடும் நல்லா இருக்கும்..
மற்ற தம்பட்டங்கள்
வரும் வாரங்களில்.....
சிறப்பு. சமூக கண்ணோட்டத்துக்கு ஒரு ஓ
ReplyDelete