பணம் என்றால் பிணமும்
வாயை திருக்கும் என்பார்கள்.. ஆனால் நம் வாக்காள பெருமக்கள், பணத்தை கொடுத்தால் தான்
விரலை நீட்டுவேன் என்று அடம் பிடிக்கும் தருவாய் தான் இடை தேர்தல்..
இந்த ஆண்டு இந்திய
துணைக்கண்டத்தில் நடந்த இடைதேர்தல்களில், ஆந்திராவில் ஆளும் கட்சி அழும் கட்சியாகிவிட்டது.. கர்நாடகாவில் ஆளும் கட்சிக்கு பலத்த அடி.. இதெல்லாம் விடுங்க...மோடி குஜராத்தில்
நிகழ்த்திய அற்புதங்களை, வேறு எந்த மாநில முதல்வர்களும் நினைத்து கூட
பார்க்கவில்லை. அவர் தான் அடுத்த பிரதமர் என்று எத்திசையும் கூக்குரல் வந்த வண்ணம்
இருக்கின்றன. ஆனால், கடந்த இடை தேர்தலில், அவரது கட்சியும் தோல்வியை சந்தித்தது..
நம் தமிழ்நாட்டிலோ
கடந்த பல இடைதேர்தல்களில், ஆளும் கட்சி தோற்க்கடிப்பதும் சிம்ம சொப்பணமா
இருக்கிறது.. எதிர்கட்சிகளால் வைப்புதொகையை கூட திரும்ப பெறமுடியவில்லை.. சிலர் அவருடைய
திராணியை நிரூபிக்க எவ்வளவோ போராடியும் வைப்புத்தொகை அல்ல இரண்டாம் இடம் கூட
பிடிக்க முடியவில்லை...
அப்படின்னா ஆளும்
கட்சியின் மீது மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கையா???.. சற்றே ஆராய்ந்துபார்த்தல்
இல்லை என்று தான் கூற வேண்டும்..பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு,
மின்கட்டண உயர்வு, வருடாந்திர மின்வெட்டு, இன்னும் பல சாதனைகள்.. இத்தனை, குறைகளை கொண்ட
ஆளும் கட்சி வெல்கிறது..... பாமரனுக்கும், ஆளும் கட்சி மேல் அதிருப்திஇருக்க தான்
செய்கிறது. அப்படி இருந்தும் ஆளும் கட்சி எப்படி வெல்கிறது...
என் பார்வையில்
ஆளும்கட்சி வெல்வதற்கான காரணங்கள்...
- ஓட்டுக்கு பணம்
- \இடைத்தேர்தலால் ஆளும் கட்சி செய்து கொடுக்கும் சௌகரியங்கள்
- ஏற்கனவே, இருக்கும் எதிரக்கட்சி உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சிக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருக்காது. இதில் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றால், ஆளும் கட்சி கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று கூட நடக்காது
நம்ம தமிழ் நாட்டு மக்கள்
எப்பவுமே அறிவாளிகள்.. அதனால் தான் , இடைதேர்தல் வாக்கு எப்போதுமே ஆளும் கட்சிக்கு
தான்..
ஆனால் பொதுத்தேர்தல்வரும் போது, நிலைமை தலைகீழாக மாறிவிடும்.