Thursday, June 14, 2012

இந்த வார வினோதங்கள்


தள்ளு தள்ளு தள்ளு...
பாகிஸ்தானின் முசாபர்கார் பகுதியில் உள்ள கான் பர் பக்கா ஷெர்ரின் உள்ளூர் மத தலைவரான மௌலவி இப்ராஹிம் சிஸ்தி, போலியோ சொட்டு மருந்து விஷம் என்றும், அதை குழந்தைகளுக்கு கொடுப்பது இஸ்லாத்திற்கு எதிரானது என்றும் அறிவித்தார். மேலும் யாரையாவது வற்புறுத்தி மருந்து கொடுத்தால் அவர்களுக்கு எதிராக புனிதப் போர் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அறிவித்தார்.
மேலும், போலியோ மருந்து கொடுத்து மக்களை மலட்டுத் தன்மை உடையவர்களாக்க மேற்கத்திய நாடுகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறி மதத் தலைவர் தங்களை நம்ப வைத்துவிட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
பின்னர் போலீஸ் துணையுடன் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் குழு கான் பர் பக்கா ஷெருக்கு மீண்டும் சென்றது.

மனிதநேயமற்ற மாந்தர்கள்
மக்கள் தொகையில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கும் சீனாவில் ஒரு குழந்தை தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அதையும் மீறி 2வது முறையாக கர்ப்பமானால் அரசுக்கு பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டும். ஷான்க்சி மாகாணத்தில் உள்ள ஜென்பிங் கவுன்ட்டியைச் சேர்ந்த பெங் ஜியாமி என்ற பெண் அபராதத் தொகையை செலுத்தவில்லை
இதையடுத்து அரசு அதிகாரிகள் 7 மாத கர்ப்பிணியாக இருந்த பெங்கை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு இழுத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர். இது தொடர்பான படங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படங்களைப் பார்த்து சீன மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இவருக்கு பதில் இவர்
சீனாவின் மறைமுகக் கட்டுப்பாட்டில் வட கொரியாவில்இந்தியத் தூதரகத்துக்கு மிக மிக முக்கியமான பணிகள் உள்ளன. சீனக் கடல் பகுதியை கட்டுப்படுத்துவது உள்பட பல்வேறு விஷயங்களில் வட கொரியாவின் உறவு இந்தியாவுக்கு மிக மிக முக்கியம்.
ஆனாலும், அங்கு பணிக்குச் சென்றால் வாழ்க்கையை என்ஜாய் செய்ய முடியாது என்பதால் முக்கியமான ஐஎப்எஸ் அதிகாரிகள் யாரும் அங்கு தூதராகச் செல்ல விரும்புவதில்லை. இந்தியாவின் பாதுகாப்பு விஷயத்தில் மிக முக்கியமான அந்த தேசத்துக்கு டம்மியாக யாரையாவது தூதராக நியமித்துவிட்டு மூத்த அதிகாரிகள் எஸ்கேப் ஆகி வருகின்றனர்.
அந்த வகையில் தான் பிஜீ தீவுகளில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சுருக்கெழுத்தாளராக இருந்த அஜய் கே. ஷர்மாவை, வட கொரியாவுக்கு தூதராக நியமித்தனர் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரிகள்.
வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு இது தொடர்பாக அனுப்பிய பைலில், ஷர்மா பிஜீ தீவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் கவுன்சிலர் பதவியில் இருந்தவர் என்று குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவரை வட கொரியாவுக்கான தூதராக நியமித்துக்கு கையெழுத்தும் போட்டுவிட்டார் கிருஷ்ணா. பின்னர் அது பிரதமர் அலுவலம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டுவிட்டது.
ஆனால், ஷர்மா ஒரு சாதாரண சுருக்கெழுத்தாளர் என்ற விவரம் வெளியானதையடுத்து அவரது நியமனத்தை கிருஷ்ணா ரத்து செய்துள்ளார்.

BUGS BUNNY
வழக்கமாக பாலா படங்களில் வினோதமான, வித்தியாசமான கதாபாத்திரங்களைப் பார்க்கலாம். நந்தாவில் லொடுக்குப் பாண்டி அதற்கு ஒரு உதாரணம். அதேபோல பரதேசி படத்திலும் இப்படி ஒரு கிராக்குத்தனமான கேரக்டர் இருக்கிறதாம். அதற்கு யாரைப் போடலாம் என்று யோசித்தபோது யார் அவருக்கு ஐடியா கொடுத்தார்களோ தெரியவில்லை, நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன் பெயரைப் பரிந்துரைத்துள்ளனர். பாலாவும் சீர்தூக்கிப் பார்த்ததில், அதேதான் ... என்று பிக்ஸாகி பவர் ஸ்டாரை கூப்பிட்டு புக் செய்துள்ளார்.
சும்மாவே பஞ்சாக பறக்கும் பவர் ஸ்டார்,. சமீபத்தில் படப்பிடிப்புக்குப் போயுள்ளார். வழக்கமாக அவருடன் அடிப்பொடி, அடியடிப்பொடி என கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கும்பலாக போவதுதான் வழக்கம். அண்ணன் சிங்கம்ல, கூடமாட ஒத்தைக்கு போகனும்ல...
இதைப் பார்த்த பாலா டென்ஷனாகி விட்டாராம். அவர்களுக்கு உறைப்பது போல வேற ஒருவரை திட்டி தீர்த்து விட்டார். பாலா கோபத்தைப் பார்த்த பவர் ஸ்டார், பங்சராகிப் போய் உடனே தனது கேங்கோடு எஸ் ஆகி விட்டாராம் அந்த இடத்தை விட்டே.

Sunday, June 10, 2012

இடைத்தேர்தல் - ஓட்டுக்குப்பணம்


பணம் என்றால் பிணமும் வாயை திருக்கும் என்பார்கள்.. ஆனால் நம் வாக்காள பெருமக்கள், பணத்தை கொடுத்தால் தான் விரலை நீட்டுவேன் என்று அடம் பிடிக்கும் தருவாய் தான் இடை தேர்தல்..

இந்த ஆண்டு இந்திய துணைக்கண்டத்தில் நடந்த இடைதேர்தல்களில், ஆந்திராவில் ஆளும் கட்சி அழும் கட்சியாகிவிட்டது.. கர்நாடகாவில் ஆளும் கட்சிக்கு பலத்த அடி.. இதெல்லாம் விடுங்க...மோடி குஜராத்தில் நிகழ்த்திய அற்புதங்களை, வேறு எந்த மாநில முதல்வர்களும் நினைத்து கூட பார்க்கவில்லை. அவர் தான் அடுத்த பிரதமர் என்று எத்திசையும் கூக்குரல் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், கடந்த இடை தேர்தலில், அவரது கட்சியும் தோல்வியை சந்தித்தது..

நம் தமிழ்நாட்டிலோ கடந்த பல இடைதேர்தல்களில், ஆளும் கட்சி தோற்க்கடிப்பதும் சிம்ம சொப்பணமா இருக்கிறது.. எதிர்கட்சிகளால் வைப்புதொகையை கூட திரும்ப பெறமுடியவில்லை.. சிலர் அவருடைய திராணியை நிரூபிக்க எவ்வளவோ போராடியும் வைப்புத்தொகை அல்ல இரண்டாம் இடம் கூட பிடிக்க முடியவில்லை...

அப்படின்னா ஆளும் கட்சியின் மீது மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கையா???.. சற்றே ஆராய்ந்துபார்த்தல் இல்லை என்று தான் கூற வேண்டும்..பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, வருடாந்திர மின்வெட்டு, இன்னும் பல சாதனைகள்.. இத்தனை, குறைகளை கொண்ட ஆளும் கட்சி வெல்கிறது..... பாமரனுக்கும், ஆளும் கட்சி மேல் அதிருப்திஇருக்க தான் செய்கிறது. அப்படி இருந்தும் ஆளும் கட்சி எப்படி வெல்கிறது...

என் பார்வையில் ஆளும்கட்சி வெல்வதற்கான காரணங்கள்...
  • ஓட்டுக்கு பணம்
  • \இடைத்தேர்தலால் ஆளும் கட்சி செய்து கொடுக்கும் சௌகரியங்கள்
  • ஏற்கனவே, இருக்கும் எதிரக்கட்சி உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சிக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருக்காது. இதில் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றால், ஆளும் கட்சி கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று கூட நடக்காது

நம்ம தமிழ் நாட்டு மக்கள் எப்பவுமே அறிவாளிகள்.. அதனால் தான் , இடைதேர்தல் வாக்கு எப்போதுமே ஆளும் கட்சிக்கு தான்..

ஆனால் பொதுத்தேர்தல்வரும் போது, நிலைமை தலைகீழாக மாறிவிடும்.

Friday, June 8, 2012

கல்வி: வெறும் புத்தக சுமை..


எவ்வளவு வருஷம் தான் கஜினி முகமது 17 முறை படை எடுத்தார்னு படிக்கிறது படிச்சிட்டு இருக்குறது. நம் நாட்டு கலாச்சாரம்,பண்பாடு இதெல்லாம் பத்தி சேர்க்கலாம்ல..யாருக்கும் திருடன்னு சொன்னா கோவம் வர மாட்டேங்குது (நெஞ்சில் நன்கூரமாய் பதிந்தால் பிரபல பதிவரிடமிருந்து சுட்ட வரிகள்)...வேற எதாவது மோசமான கெட்ட வார்த்தைல திட்டினா தான் கோவம் வருது...(சில பேருக்கு அப்ப கூட கோவம் வர மாட்டேங்குது)..

லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தவறு...அடுத்தவர் பொருளுக்கு ஆசை பட கூடாதுன்னு...இதெல்லாம் பள்ளிக்கூட்த்திலேய கத்துகிட்டா தான வருங்காலத்திலாவது இந்தியாவில் நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்க முடயும்.

இதெல்லாம் தமிழ் செய்யுள்லயே...ஔவ்வயார், திருவள்ளுவர், சீத்தலைச்சாதனார், தொல்காப்பியர், இளங்கோவடிகள் எல்லாரும் எழுதிருக்காங்கலே அதெல்லாம் படிச்சா போதாதானு... நீங்க கேக்கலாம்..ஆனான, இந்தப் பயலுக எல்லாம் வாய்ப்பாட்ட கூட மனப்பாடம் தான பண்றானுவ...அது மட்டும் இல்லாம எழுத்துப்பிழை இல்லாம யாரவது எழுதினா ஆசிரியரே கின்னஸ் சாதனை பண்ணா மாதிரி பேசுறாகங்க,,

சரி... ஆசிரியர் நட்த்துறத வெச்சி புரிஞ்சிக்க முடியாதான்னு கேள்வி எழுப்பலாம்.. முன்னெல்லாம் ஆசிரியராகிறத..பாக்கியமா நினைபாங்க.. இப்பெல்லாம் வேலை கிடைக்காதவங்க, சும்மா வீட்டுல இருக்கிறதுக்கு ஏதாவது தனியார் பள்ளியில் வேலைக்கு போகலாம்னு இருக்கும் யுவதிகள் இவங்களெல்லாம் தான ஆசிரியர் வேலைக்கே வராங்க..அப்பறம் எங்க அவங்க பாடத்தை ஒழுங்கா நட்த்தி பசங்க புரிஞ்சுக்கிறது...
இவங்க மத்தியிலும் சில நல்ல அற்புதமான ஆசிரியரெல்லாம் இருக்காங்க.. அவங்களால தான் வண்டி கொஞ்சம் ஒடிட்டு இருக்கு..

சரி, தனியார் பள்ளிகள்-ல குழந்தைகளை சேர்க்காம, அரசு பள்ளிகள்-ல் சேர்த்து விட வேண்டியதுதானன்னு..அங்க எல்லாம் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்வாங்க.. ஆசிரியர்.. பதிவியை சேவையா நெனைக்குற ஆசிரியர் தான் வேலைக்கு வருவாங்க.. ஏன்னா அவங்க ஆசிரியர் ஆகனும்னு சிறு வயதிலிருந்தெ பயிற்சியில் ஈடு பட்டிருபாங்கனு சொல்லுவீங்க...

சென்னை-ல பெரும்பாலான அரசு பள்ளிகள்-ல ஆசிரியர் பதவி (வேலையோ.. உத்தியோகமோ அல்ல) காலியிடமா தான் இருக்குது.. அடிப்படை வசதி மிகவும் குறைவா தான் இருக்குது....என்னுடைய சிறவயது நண்பர் ஒருவர் படித்த அரசு பள்ளியில் மழை பெய்தா பள்ளி விடுமுறை தான்.. ஆசிரியர் வந்தாலும் விடுமுறை மாதிரி தான் இருக்கும்..
தேர்வு நாட்களுக்கு முன்னாடி வினாத்தாளை பசங்கலுக்கு வினயோகம் பண்ணி தேர்ச்சி அடைய வெச்சிருவார்..

இதனால சகல நண்பர்களுக்கு அடியேன் அடிக்கும் தம்பட்டம் என்னவென்றால்...குழந்தைகளுக்கு அனா, ஆவன்னா சொல்லு கொடுக்குறதிக்கு முன்னாடி. நல்ல பழக்க வழக்கங்கல சொல்லி கொடுங்க... பெரியோர்கள் பலரும் சொன்ன மாதிரி, நல்ல மதிப்பெண் எடுகிறார்களா அன்று பார்பதி விட்டு விட்டு.. நல்ல குண நலன்களை பெற்றிகிரார்களா என்று பாருங்கள்......அவங்களுக்கு நல்லது கட்டத்தை சரியா சீர்தூக்கி பார்க்கும்படி அவங்க பகுத்தறிவை  வளர்த்துவிடுங்க..

வருங்கால தலைமுறையினரால..நம்ம வீடு மட்டுமில்லாம நாடும் நல்லா இருக்கும்..

மற்ற தம்பட்டங்கள் வரும் வாரங்களில்..... 

Wednesday, June 6, 2012

என்னை ஈர்த்த பாடல் வரிகள் பகுதி -1


பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பி கேட்டதாம் கருடா சௌக்கியமா.. யாரும் இருக்கும் இடத்தில்; இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது”

இந்த பாட்டை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவ்வளவு அருமையான தத்துவத்தை பாமரனும் உணரும் படி கவியரசு எழுதியது...
கேட்கும் போதெல்லாம் உன் துகுதிக்கு ஏற்றார் போல் நடந்து கொள் என நினைவூட்டும் பாடல்..

ஒருநாளும் வாழ்க்கை எங்கும் ஓடி போகாது.. மறு நாளும் வந்து விட்டால்.. துன்பம் தேயும் தொடராது.-புதுப்பேட்டை..

இந்த பாட்டை கேக்கும் போதெல்லாம்.. எனக்கு நினைவுக்கு வர்றது “என் பேரு  குமாரு கொக்கி குமாரு“.. எனக்கு புடித்த பாடல்களில் எப்பவுமே முதல் இடம் இதற்கு தான்... எதுவுமே நிரந்தரமில்ல.. இதுவும் கடந்து போகும் இந்த நிலையம் மாறிவிடும்,.. என்று உணர்த்தும் அருமையான பாடல்..படத்தில் இடம்பிராதது ஒரு மிகப்பெரிய வருத்தம்

“ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே நீ கண்ணுறங்கு.. என்னோட மடி சாய்ந்து” – ராம்

எவ்வளோ அம்மா பாடல்கள் வந்தாலும்.. எனக்கு பிடித்த அம்மா பாடல் இதுதான்...பல பாடல்களிலும் அம்மாவை பாராட்டே பாடியிருப்பார்கள்..ஆனால் பாராட்டினால் மட்டும் போதாது.. அவரை நீ தான் சீராட்டனும் என்று உணர்த்தும் பாடல்..

“நான் ஒரு முட்டாளுங்க ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க ..ஏற்கனவே சொன்னவக ஏமார்ந்து போனாங்க.. எல்லாம் தெரிஞ்சவங்க புத்தி சொல்ல வந்தீங்க.”

ஏனோ எனக்கு சிறு வயதிளிருந்தே சந்திரபாபு பாட்டுனா கொஞ்சம் இல்ல ரொம்பவே இஷ்டம்..
அடுத்தவன் உன்னை குறை சொல்லறான..அதை பத்தி எல்லாம் கவலை படாம,,அவன் சொன்னதை உன்னோட செயலால பொய் நிருபிக்க சொல்ற பாட்டு..

“என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பார் என்னை பிடிக்கும்”–வாரணம் ஆயிரம்

ஒரு பெண்ணோ ஆணோ ஒரு இணையை தேர்வு செய்யும் முன்.. தத்தம் அவரவர் இணையின் குடும்ப சூழ்நிலையையும்..பழக்க வழக்கங்களையும் தேர்ந்து கொள்ளுங்கள்...ஒரு தெரிவு வந்த பின் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்..
ஏனினில், பெரும்பாலானோர் காதலை கனிய வைப்பதற்காக நடிக்க தான் செய்கிறார்கள்... ஒரு பபிரச்சனை வரும் பொது தான் அவரவர் சுயனில்லை இணைக்கு தேரா வருகிறது

“காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயரோடிருந்தால் வருகிறேன்” –இயற்கை
என் உயிர் பிரியும் வரை உன் காதலுக்காக காத்திருபேன்  என்பதையும்.. உன்னை உயருக்கும் மேலாக காதலிப்பவனை...ஏற்று கொள்ள மறுக்கிராயே என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார்கள்

என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை.... கண்ணீருக்கே நான் தத்துப்பிள்ளை.. என் காதலீ,,,,,,,,தண்ணீரில் மூழ்காது கற்றுள்ள பந்து என்னோடு நீ பாடவா சிந்து...-ஜேசுதாஸ் பாடல்(ஈரமான ரோஜாவே)



மிக நேர்த்தியான வரிகளுடைய சோகப்பாடல். கேட்பவர்கள் அனைவரயும் சோகத்தில் ஆழ்த்தும் பாடல்...

தம்பட்டங்கள் தொடரும்!!!!!

Saturday, June 2, 2012

தம்பட்டம் ஒரு முன்னோட்டம் பகுதி -1

ரொம்ப நாளா மனசுல ஒரு எண்ணம் ...நம்ப ஏன் பதிவு எழுத கூடாதுன்னு... அதான் இப்ப  எழுதஆரம்பிச்சிட்டேன்... நான் பின் தொடர்ந்த பதிவர்களை போல நானும் சொந்த கதை சோக கதைகளையே எழுதலாம்னு முடிவுக்கு வந்திருக்கேன்... 

பெயர் : விக்னேஷ் ஜானகிராம் கருணாகரன்  

படிப்பு : இளநிலை மின்னியல் பொறியாளர் 

வேலை செய்வது : ஒரு Fortune 500 நிறுவனம்

உத்தியோகம் : சூழ்நிலை கைதி

ஊர் : சிங்கார (சிங்கி அடிக்க வைக்கும்) சென்னை 
சிங் சாங் அடிக்கலைனா இங்க முன்னேறுவது ரொம்ப கஷ்டம் 

பெயர் காரணம்

என்னடா இவன் பெயருக்கெல்லாம் காரணம் சொல்றான்னு பாக்கிறீங்கள... என்னோட நண்பர்கள் பலர் என்கிட்டே கேக்குற கேள்வி இதுதான்.. 
எண்டா உன் பெயர் இவ்ளோ பெருசா இருக்கு?
உங்கப்பா பெயர் ஜானகிராம்-ஆ ?
அதனால என்ன இனிமே யாரும் இந்த கேள்வி கேக்க கூடாதுன்னும்... முதல் சொந்த கதைலையே.. பியர் காரணத்த போட்டுலாம்னு எழுதுறேன்...

ஆம்பிளை பிள்ளை பொறந்தா விநாயகர் பெயரிடனும்றது அப்பாவோட வேண்டுதல்..சிறிய தகப்பனாரின் பெயரான "ஜானகிராம்" னு (நட்சத்திர எழுத்தும் "ஜா" வந்துட்டதுனால்) வெக்கனும்றது தாய்மாமாவின் விருப்பம்..

ரெண்டு பேரோட திருப்திக்காகவும் இவ்வளவு பெருசா வெச்சிடாங்க...

ஆனா பேரு வேச்சவன்களே என்ன முழு பேரு சொல்லி கூப்பிட்டதில்ல.. அப்பா மட்டும் விக்னேஷ்-னு அன்பா கூப்பிடுவார்.. மத்த எல்லாரும் "விக்கி"-னு தான் கூப்பிடுவாங்க...

ஆனா எனக்கு என்னவோ "ஜானகி", "ஜானகிராம்" னு கூப்பிட்டா ரொம்ப பிடிக்கும் .

எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும்... தமிழ்-ல அச்சு கோர்ப்பது எனக்கு புதுசு போக போக திருத்தி கொள்கிறேன்... 

அடுத்த தம்பட்டம் வரும் வாரங்களில்